Friday 17 March 2017

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வு - மாணவர்களை குழப்பிய 'நேரம்'

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மொத்தம் 150க்கு 75 மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாகவும், 75 மதிப்பெண் வினாக்கள் 'தியரி'யாகவும் கேட்கப்படும். முதல் 75 வினாக்களுக்கான  விடைகளை தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும். இப்பகுதியை மாணவர்கள் எழுதுவதற்கு கடந்தாண்டு முதல் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் நேற்று நடந்த தேர்வில் 'ஓ.எம்.ஆர்., ஷீட்'டில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு '75'
நிமிடங்கள்' என குறிப்பிடப்பட்டதால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும், என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், '75 நிமிடங்கள்' என அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.
சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, 'நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள் தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை கண்காணிப்பாளர் பெற வேண்டும்,' என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Saturday 11 March 2017

புதிய கல்வி அமைச்சருடன் தமிழக ஆசிரியர் அமைப்புகள் வைத்த கோரிக்கைகள்

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள்  புதிய கல்வி அமைச்சரை அணுகி அவர்களின் கோரிக்கையை முன் வைத்தனர்.

அவர்களின் கடிதங்களில் இருந்த முக்கிய விவரங்கள் :

23/08/2010 - க்குப் பிறகு ஆசிரியப் பணி பெற்று பணியில் உள்ள அனைவருக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டி இருந்தது.

நாங்கள் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை பணிப் பாதுகாப்பு இன்றி அரசின் சலுகைகள்  அரைகுறையாக பெற்றும் வளரூதியம் ஊக்க ஊதியம் போன்ற அடிப்படை பணப்பலன் கூட இல்லாத சூழலில் பணியில் உள்ளோம்.
காரணம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வும் அதனைச் சார்ந்த நிபந்தனைகளும்.

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டும் எதிர் வரும் TNTET, எங்களின் இறுதி நாட்களாக அமைய வாய்ப்பு இருப்பதாக அரசாணை எண் 181 கூறுவது மேலும் எங்களுக்கு வாழ்க்கை பற்றிய பயத்தை தோற்றுவிக்கிறது.

சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக TET நிபந்தனைகளுடன் பணியில் இருந்த எங்களுள் தற்போது 80% ஆசிரியர்களுக்கு முழுவதும் TET லிருந்து விலக்கு கிடைத்து விட்டது.

(2010 மே மாதம் பதிவு மூப்பு மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்ற 50-60% ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் பெற்ற 20-30% ஆசிரியர்கள் TNTET லிருந்து முழு விலக்கு பெற்றவர்கள் ஆவர்)

மீதமுள்ள (நாங்கள்) 20% ஆசிரியர்களில் பாதிபேர் கலப்பு திருமண முன்னுரிமையிலும், விதவைகளும், இராணுவ வாரிசுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு இனத்தைச் சார்ந்த பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள்.

கடைசியாக மீதி மிக சொற்ப ஆசிரியர்கள் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களால் பலகட்ட போட்டி / தகுதி /  நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

TET தேர்வு அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதுவே கடைசி வாய்ப்பு என மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக பெற்றுள்ள கடிதங்கள் மேலும் சிக்கல்களை மனதளவில் அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளன.

தற்போதைய சூழலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் TNTET எழுதுவதில் பணியில் உள்ள எங்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து பயில நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன.

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின்  திருப்புதல் , இதர வகுப்புகளின் மாணாக்கர்களின் தேர்வு, நிறைவு CCE பணிகள், பணியிடைப் பயிற்சிகள், கோடை  சிறப்பு வகுப்புகள்,  அரசு SSLC பொதுத் தேர்வு பணி, விடைத்தாள்கள் திருத்தம், உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல் பணிகள் போன்ற பல பணிகள் வரும் இரண்டு மாதங்களில் எமக்கு சவாலாக அமைய உள்ளது.
.
சிறுபான்மையினர் பள்ளி TET  நிபந்தனை ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது போல எங்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க  செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

Thursday 9 March 2017

டெட் தேர்வுக்கு இலவச பயிற்சி

 'டெட்' தேர்வுக்கு' ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு  இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு  ஏப் -  29 மற்றும் 30ல் நடக்க உள்ளது. எனவே  'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின பட்டதாரிகளுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகமான, 'தாட்கோ' மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர  உரிய கல்வித் தகுதியுடன், 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், http://training.tahdco.com என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

நன்றி

 அன்பார்ந்த வாசகர்களே,

தமது இணையதளத்திற்கு வந்தமைக்கு மிக்க நன்றி ....